பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தியா உடனான உறவை வலுப்படுத்தும்-உறுதி அளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

Update: 2025-02-26 16:22 GMT

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உறவு வலிமையாகவும் ஆழமானதாகவும் முக்கியமானதாகவும் உள்ளது உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க இந்தியாவுடன் ஆன பொருளாதார உறவை ஆஸ்திரேலிய தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது 

மேலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் சிறப்பாக பயன்படுத்துவதற்காக புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் தெரிவித்துள்ளார்

அதுமட்டுமின்றி இந்தியா ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு நிதிக்கு ஆஸ்திரேலியா 139.40 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது அதோடு இந்த நிதியானது ஆஸ்திரேலிய தொழிலதிபர்கள் இந்தியாவின் சந்தைகள் நுழைந்து புதிய வணிக வாய்ப்புகளை திறக்க உதவ உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது 

அந்த வகையில் சுத்தமான எரிசக்தி கல்வி மற்றும் திறன் மேம்பாடு விவசாய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளை ஆஸ்திரேலியா அரசு தேர்வு செய்துள்ளது இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஊக்கிவிக்கப்படுவதோடு ஆஸ்திரேலியர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News