பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது
கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளில் 25 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர் அதில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஷுபம் திவேதி என்பவர்தான் பயங்கரவாதிகளால் முதன்முதலாக சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதுவும் அவரது மனைவி மற்றும் சகோதரியின் கண் முன்னே கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது பயங்கரவாதிகளின் இந்த செயலை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது
இந்த நிலையில் தான் வருகின்ற முப்பதாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிகழ்ச்சிக்காக கான்பூர் செல்ல உள்ள நிலையில் அங்கு பல திட்டங்களை தொடங்கி வைத்த பிறகுஷுபம் திவேதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக கூறப்படுகிறது