ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்த முதல் கூட்டம்:இணைந்தால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல-பிரதமர் மோடி

Update: 2025-05-24 17:20 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிதி ஆயோக்கின் 10 வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது அதில் பேசிய பிரதமர் மத்திய அரசும் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக டீம் இந்தியாவைப் போன்று செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என தெரிவித்துள்ளார் 


மேலும் ஒவ்வொரு மாநிலம் வளர்ச்சி அடையும் போது பாரதம் வளர்ச்சி அடைகிறது. ஒவ்வொரு இந்தியனின் இலக்கும் வளர்ச்சியடைந்த பாரதம்தான் 140 கோடி மக்களின் விருப்பமும் இதுவே என கூறினார் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  லெப்டினன்ட் கவர்னர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்

Tags:    

Similar News