இம்ரான் கானை சந்திக்காத பாரத பிரதமர் மோடி : உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானுக்கு மூக்கடைப்பு

இம்ரான் கானை சந்திக்காத பாரத பிரதமர் மோடி : உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானுக்கு மூக்கடைப்பு

Update: 2019-06-13 19:01 GMT

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, ஜூன் 14 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடி இதில் பங்கேற்க டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு சென்றார். அங்கு சீன மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.




https://twitter.com/ANI/status/1139205661944795136?s=19


மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து 3வது இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை.பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதால் தான் பிரதமர் மோடி இம்ரான் கானை சந்திக்காமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மூக்குடைப்பாக உலக நாடுகள் மத்தியில் கருதப்படுகிறது.




https://twitter.com/IamNaveenKapoor/status/1139206370677252096?s=19

Similar News