எந்த காரணத்துக்காக சோனியா காந்தி குடும்பத்துக்கு பாதுகாப்பு தர வேண்டும்? பாராளுமன்ற மேல் சபையில் வாங்கிய சுப்பிரமணியசாமி!

எந்த காரணத்துக்காக சோனியா காந்தி குடும்பத்துக்கு பாதுகாப்பு தர வேண்டும்? பாராளுமன்ற மேல் சபையில் வாங்கிய சுப்பிரமணியசாமி!

Update: 2019-12-06 01:59 GMT

பாராளுமன்ற மேல்சபையில் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத்திருத்த
மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு டாக்டர் சுப்பிரமணியசாமி பேசினார். அப்போது அவர்
கூறியதாவது:-


விடுதலைப்புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கூறி சோனியா குடும்பத்திற்கு
எஸ்.பி.ஜி பாதுகாப்பு கேட்கின்றனர்.


ஐ.கே.குஜரால் அரசுக்கு காங்கிரஸ் அளித்த வந்த ஆதரவை வாபஸ்
பெற்றதன் மூலம், குஜ்ரால் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்தது. அதற்கு கூறிய ஒரே காரணம்,
குஜரால் அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. அந்த ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை
கொலை செய்த திமுக அங்கம் வகிக்கிறது. ஆகவே குஜரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்
பெற்றதாக சொன்னார்கள். குஜராலின் மகன் இப்போது இங்கே இருக்கிறார். அவருக்கு வேண்டுமானால்
ஒரு வேளை ஞாபகம் இல்லாமல் இருக்கலாம்.


ஆனால் அதே காங்கிரஸ் கட்சி, இப்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
அவர்கள் இப்போது நண்பர்கள்.


 ராஜீவ் காந்தி கொலை
மிகக் கொடூரமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நாட்டிற்கு எதிரானது என்று கூறியது.
ஆகவே கொலையாளிகளுக்கு அதிகபட்சத் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது.


இதுதொடர்பாக சோனியா காந்தி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அதனுடைய நகல் என்னிடமும் உள்ளது. அந்த கடிதத்தில், “ராஜீவ்காந்தி கொலையாளிகளின் தண்டனையை
ஆயுள் தண்டனையாக குறைக்க கூடாது” என்று வலியுறுத்தி இருந்தார்.


ஆனால் அதன் பிறகு சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி,
ராஜீவ் காந்தி கொலையாளியை அடைத்துள்ள ஜெயிலுக்கு சென்றார். அங்கே ராஜீவ் காந்தியின்
கொலையாளி நளினியை சந்தித்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள்
மட்டுமே அவர்களை சந்திக்க முடியும் என்று ஜெயில் விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த விதிமுறைகளை மீறி பிரியங்கா காந்தி ஜெயிலுக்கு சென்று ராஜீவ்காந்தி கொலையாளியை
சந்தித்தார். ஜெயில் விதிமுறை மீறப்பட்டுள்ளது பிரியங்கா காந்தி ஜெயில் விதிமுறைகளை
காலில் போட்டு மிதித்துள்ளார்.


ஆகவே சோனியாகாந்தி குடும்பத்திற்கு விடுதலைப் புலிகளால் எந்த
அச்சுறுத்தலும் இல்லை.


அப்படியானால் அவர்கள் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் உள்ளது?


இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்
வராது. ஏனென்றால் அவர்கள் மத சார்பற்றவர்கள். ஆனால் நாம்தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்.


எனவே நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இந்திய அரசியலமைப்புச்
சட்டப்படி, சட்டம் அனைவருக்கும் சமம். அவர்களுக்கு என்று தனியாக ஒரு சட்டம் கிடையாது.
அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.


இரண்டாவதாக, அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்
என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் ஊழல் வழக்குகளில் அவர்கள் ஜெயிலுக்கு போவதை
நாங்கள் பார்க்க வேண்டும்.


இவ்வாறு சுப்பிரமணியசாமி குறிப்பிட்டார்.


Similar News