மோடி அரசினால் ஏற்பட்ட வளர்ச்சிக்கு பிரச்சாரமே தேவையில்லை: வெளிப்படையாகக் காணக் கிடைக்கிறது - தமிழிசை சௌந்தர்ராஜன்!

மத்திய அரசினால் ஏற்பட்ட வளர்ச்சிக்கு பிரச்சாரம் செய்யவே தேவை இல்லை. மோடியே இந்நிலைக்கு காரணம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Update: 2024-03-30 10:10 GMT

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தெலுங்கானா ஆளுநர் புதுச்சேரி துணை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் சில தினங்களுக்கு முன்பு தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அரசியலில் இறங்கபோவதாக அறிவித்தவர் தமிழகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதன்படி தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக மீண்டும் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள தமிழிசை, திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழிசை கோயம்பேடு பகுதியில் பிரச்சாரம் செய்த அவர் நடைபாதையில் சில பெண்களால் நடத்தப்படும் கடைகளில் வடை வாங்கி கட்சிக்காரர்களுடன் சாப்பிட்டார். பின்னர் வடைக்கு யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை "நாடு கண்டுள்ள வளர்ச்சியை இருக்கும் சாட்சிகளை கொண்டு விளக்க நான் விரும்பினேன். அதனால் சாலையோர கடையிலிருந்து வடை வாங்கினேன் .இந்த கடையில் உரிமையாளர் ஒரு பெண். அது பெண் சக்தியை குறிக்கிறது. அதேபோல் வடைக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினேன்.

நாம் அனைவரும் கனவு காணும் வளர்ச்சி இதுதான். தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள் வரை வளர்ச்சி எட்டியுள்ளது. நான் எதையும் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் மத்திய அரசின் வளர்ச்சி எல்லாம் இங்கு வெளிப்படையாகவே காணக் கிடைக்கிறது. நமது நாடு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியே இந்த நிலையை எட்டக் காரணம்" இவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.


SOURCE :Dinakkural

Similar News