தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது - எளிய சாதனையாளர்களை கண்டறிந்து கௌரவிக்கும் மத்திய அரசு!
உத்திரபிரதேசம் முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் போல தமிழகத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம் மற்றும் பாம்புபிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்த பிரபலங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதிகம் அறியப்படாத ஹீரோக்கள் 26 பேர் என மொத்தம் 16 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சமீபத்தில் மறைந்த சமாஜ்வாடி நிறுவனரும் உத்திரபிரதேச முன்னாள் முதல் மந்திரியும் ஆன முலாயம் சிங் யாதவ், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணா உள்பட ஆறு பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக சேவகர் சுதா மூர்த்தி, தெலுங்கானாவை சேர்ந்த சுவாமி ஜீயர் உட்பட ஒன்பது பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத் தவிர 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சமூக சேவை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் , மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர். இதைப் போல சமூக சேகர் பாலம் கல்யாணசுந்தரம், டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.