கட்டாய மதமாற்றம்:
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சந்தா ஷாமன் மாக்சி. வயது 15. சிறுமி கடந்த அக்டோபர் 13ம் தேதி முஸ்தபா தோகர் மற்றும் சவுகத் அலி என்ற இருவரால் கடத்திச் செல்லப்பட்டார். சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அக்கும்பல், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
போலீசில் புகார்:
சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் ஃபக்கீர் ஷிவா கச்சி போராட்டம் நடத்தினார். இதையடுத்து, இந்த விவகாரம் வெளிவர தொடங்கியது. விசாரணையில், சந்தா ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அநியாய தீர்ப்பு:
சிறுமி கராச்சியில் இருந்து மீட்கப்பட்டு அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கு கராச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறுமியை பெற்றோரிடம் அனுமதிக்க மறுத்த நீதிமன்றம், கடத்தப்பட்டவரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டது. தீர்ப்பைக் கேட்ட அச்சிறுமி, தனது பெற்றோரையும், உறவினர்களையும் கட்டிப் பிடித்து அழுதனர்.
Input From: Puthiyathalaimurai