மத்திய அரசின் கண்டனத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரிகள் விடுதலை.! #pak #indianofficers

மத்திய அரசின் கண்டனத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரிகள் விடுதலை.! #pak #indianofficers

Update: 2020-06-16 03:25 GMT

பாகிஸ்தானில் 2 இந்திய தூதரக அதிகாரிகள் திடீரென கைது செய்யப்பட்டனர், இந்திய அரசின் கண்டனத்தை தொடர்ந்து பாக் அவர்களை விடுதலை செய்தது. பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்'தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 2 பேர் நேற்று திடீரென மாயம் ஆனார்கள்.

அந்த இரு அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர் ஆனாலெ அவர்கள் போக வேண்டிய இடத்திற்க்கு போய்ச் சேரவில்லை, அவர்கள் என்ன ஆனார்கள்? யாரும் கடத்தினார்களா என்ற தகவல் தெரியாமலேயே இருந்தது. இது குறித்து உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய அரசுக்கும் முதற்கட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

இதில் திடீர் திருப்பமாக, அந்த இரண்டு அதிகாரிகளும் சென்ற கார் நடந்து வந்த ஒருவர் மீது மோதியதாகவும், இதன் காரணமாக இஸ்லாமாபாத் போலீசார் இருவரையும் கைது செய்ததாகவும் பாகிஸ்தானில் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகியது. இதன் பிறகுதான் அவர்கள் இருவரும் தூதரக அதிகாரிகள் என போலீசாருக்கு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தனர், அத்துடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் துன்புறுத்தலுக்கு ஆளானால் அத்ற்கு ரபாகிஸ்தான் முழு பொற்ப்பு ஏற்க வேண்டும் என எச்சரித்தனர். இதைனயடுத்து கைது செய்யப்பட்ட அந்த இரு அதிகாரிகளையும் பாகிஸ்தான் காவல்துறை உடனடியாக விடுதலை செய்தது.

Similar News