"மருந்தை அனுப்பி உதவி செய்யயுங்கள்" - இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

"மருந்தை அனுப்பி உதவி செய்யயுங்கள்" - இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

Update: 2020-04-16 10:22 GMT

அண்டை நாடான பாகிஸ்தானில் 6,383 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் 111 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாகிஸ்தானில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தந்து இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உலக அளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்னும் எந்தவித மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பயனைத் தருகிறது எனக் கூறி முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அனுப்பி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை, மலேசியா உட்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.

தற்போது அண்டை நாடுகள், நட்பு நாடுகளுக்கு மருந்து தந்து உதவ தயார் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அனுப்பி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

Similar News