"என் ராமனுக்காக நின்றே வாதாடுவேன்" 92 வயதிலும் நின்றுக் கொண்டே வாதாடி ராமர் கோவில் பெற்று தந்த மூத்த வழக்கறிஞர், தமிழர் பராசரன்!

"என் ராமனுக்காக நின்றே வாதாடுவேன்" 92 வயதிலும் நின்றுக் கொண்டே வாதாடி ராமர் கோவில் பெற்று தந்த மூத்த வழக்கறிஞர், தமிழர் பராசரன்!

Update: 2019-11-10 11:44 GMT

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை தினமும் விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று  பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்த 40 நாட்களில் நடந்த விசாரணையின் போது வாதாடி வந்த 92 வயது தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரனிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்" என்றார். "வக்கீல் நின்று வாதிடுவது தான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்" என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுக்கொண்டே உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார் தமிழகத்தைச் சார்ந்த முதுபெரும் வழக்கறிஞர் திரு. கேசவன் பராசரன் அவர்கள்.


இந்த வழக்கில் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை அவர். இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார். தொழில் பக்தியும் இறை பக்தியும் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.பராசரன்.


ஈ.வெ.ராமசாமி தமிழ்நாட்டில் ராமர் சிலை உடைத்துள்ளார், முன்னாள் முதல்வர் கருணாநிதி ராமர் இருந்ததற்கான சான்று எதுவும் இல்லை என்றார், ஆனால் இன்று அதே தமிழ்நாட்டில்(ஸ்ரீரங்கம்) ஒருவர் ராமருக்காக வாதாடி 491 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்காக போராடி வெற்றிப் பெற்றுள்ளார் வழக்கறிஞர் கே.பராசரன்.


Similar News