மூத்தக் குடிமகன்களுக்கு முக்கியச் செய்தி : 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு இனி 12 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

மூத்தக் குடிமகன்களுக்கு முக்கியச் செய்தி : 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு இனி 12 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

Update: 2019-02-20 11:32 GMT

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.


கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.


அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார்.


Similar News