நீங்கள் என்ன வரைகிறீர்கள்? என்று கேட்டவருக்கு - ஓவியர் பிகாசோ சொன்ன பதில்?!

நீங்கள் என்ன வரைகிறீர்கள்? என்று கேட்டவருக்கு - ஓவியர் பிகாசோ சொன்ன பதில்?!

Update: 2019-12-23 02:25 GMT

பிகாசோ கடற்கரை
ஒன்றில் வரைந்து கொண்டிருந்தாராம். அதை ஒரு மனிதர் இரண்டு மணிநேரமாக பார்த்து
கொண்டிருந்தார். ஒருவர் வரைவதை மற்றொருவர் பார்ப்பது, அதுவும் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பார்ப்பதென்பது
அறிதானவொன்று. ஆனாலும் ஓவியர் ஓவியத்தை முடித்தபாடில்லை.


பொறுமையிழந்த
மனிதர் அவரிடம் சென்று ”நீங்கள் உங்கள் தூரிகையை கீழே வைக்கும் தருணத்திற்காக
காத்து கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
என்னால் இதை உங்களிடம் கேட்காமல் இருக்க இயலவில்லை. இதை கேட்பதற்காக மன்னிக்கவும்!
நீங்கள் எதை வரைகிறீர்கள்? என்னால் இரண்டு மணி
நேரத்திற்க்கு மேல் கூர்ந்து கவனித்தும் எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை”


அதற்கு பிகாசோ
கூறியதாக சொல்லப்படும் பதில்: “வியப்பாக இருக்கிறது. இதை எதற்காக நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும்? யாராவது
இயற்கையிடம் சென்று ஏன் இந்த மலையை உருவாக்கினாய்? ஏன் இந்த கடலை உருவாக்கினாய்? எதற்காக இத்தனை பறவைகள், மலர்கள், மனிதர்கள்?
இவர்களுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று
கேட்டிருக்கிறார்களா? ஆனால் நானோ ஒரு
சாதரண ஓவியன், எனக்கு கிடைத்த
சிறிய காகித்த்தில் எனக்கு தெரிந்த ஏதோவொன்றை செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக
மொத்த உலகமும் இதற்கான பொருளை அறிய முற்படுகிறீர்கள். எதற்காக இது பொருள் கொடுக்க
வேண்டும்.


இந்த பதிலில் பதறிய
மனிதர், “நான் உங்களை
காயப்படுத்த கேட்கவில்லை” என்றார்.


அதற்கு ஓவியர் நான்
காயப்படவில்லை. உங்கள் கேள்விக்கான பதிலை தருகிறேன். மனிதர்கள் அனைத்திற்க்கும்
பொருள் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அறிந்துவிடவேண்டும்
என்று துடிக்கிறார்கள். எனக்கு கூட நான் வரைந்த்து என்னவென்று தெரியாது. ஆனால்
நான் இதை வரைந்த்தில் ஆனந்தம் கொள்கிறேன். இது எனக்குள் வெகு நாட்களாக கிடந்தது,
நான் இதை பல நாட்களாக சுமந்து
கொண்டிருந்தேன். இந்த வண்ணங்கள் அனைத்தும் என் மனதுக்குள் தேங்கி கிடந்தது அதை
இந்த காகித்த்திற்க்கு இடம் மாற்றிவிட்டேன். இது என்ன என்றும்? இதை அறிந்து கொள்ளும் முயற்சியையும் நான்
மேற்கொள்ளவேயில்லை.


உங்களால் ஒரு
நடனகலைஞரிடம் சென்று “நீ செய்வது என்ன?” என்று
கேட்க முடியாது. அதை நீங்கள் விரும்பலாம், ரசிக்கலாம்,
உங்கள் ஆர்வம் அதிகரித்தால் நீங்களும்
சேர்ந்து ஆட துவங்கலாம். ஆனால் அது என்ன என்பதை ஆராய முடியாது.


வாழ்வின் சில
விஷயங்கள் புதிரானது, மர்மமானது. அந்த
விளங்காநிலை தான் நம் வாழ்க்கையை சுவரஸ்யமாக்குகின்றன. கலை, இலக்கியம், இசை, தத்துவம்
என அனைவராலும் ரசிக்கப்படுகிற, கொண்டாடபடுகிற
தளங்கள் உச்சத்தை அடைவதற்கான ரகசியம் அதனுள் புதைந்திருக்கும் புதிர் தான்
அப்புதிர்களை அவிழ்க்க செலவிடும் நேரத்தை அனுபவிப்பதில் செலுத்தினால் எத்தனை
அழகானதாக இருக்கும் வாழ்க்கை? “ என்றாராம்.


Similar News