புது டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாடு: பிரதமர் பங்கேற்பு!
தலைமைச் செயலாளர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு.
புதுதில்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முக்கியமான கொள்கை தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வதற்கான குழு உணர்வை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு அற்புதமான மன்றம் என்று மோடி கூறினார். இது இந்தியாவிற்கான புதிய உத்வேக பாதையை அடைவதற்கான வழிகளை காட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பிரதமர் டுவிட்டரில் கூறுகையில், "தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். முக்கியமான கொள்கை தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், இந்தியாவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான குழு உணர்வை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு அருமையான அமைப்பாகும்" என்று நான் கலந்து கொண்ட அனுபவத்தை பதிவிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் செயலாளர் மாநாடு மூன்று நாட்களாக நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி இருக்கிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் இருந்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாநிலத்தின் ஒத்துழைப்போடு இந்தியா வளர்ச்சி கட்ட பாதையை நோக்கி அடி எடுத்து வைக்க புதிய முயற்சி ஆகும் இது பார்க்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: PIB