இந்தியாவை மாற்றிய டெக்னாலஜி - “பிரிட்ஜிடல் நேஷன்” புத்தக வெளியிட்டு விழாவில் பிரதமரின் அபார உரை!

இந்தியாவை மாற்றிய டெக்னாலஜி - “பிரிட்ஜிடல் நேஷன்” புத்தக வெளியிட்டு விழாவில் பிரதமரின் அபார உரை!

Update: 2019-10-21 08:42 GMT

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் லோக் கல்யாண் மார்க் என்னும் முகவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “பிரிட்ஜிடல் நேஷன்” எனும் நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ரத்தன் டாடா பெற்றுக் கொண்டார். இந்த புத்தகம் என் சந்திரசேகரன், ரூபா புருஷோத்தம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.


மக்களும், தொழில்நுட்பமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் பயன்பெறும் சுற்றுச்சூழல் குறித்த வலுவான எதிர்கால தொலைநோக்கை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது. மனித சக்திக்கு மாற்றாக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்தியா இதனை மேலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கருவியாக பயன்படுத்தலாம் என்று இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. அதிநவீன டிஜிட்டல் உபகரணங்கள், அபிலாஷைகளுக்கும், இலக்குகளை அடைவதற்கும் இடையிலான பாலமாக திகழலாம் என்பதால், “பிரிட்ஜிடல்” எனும் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக விவரித்துள்ளதுடன், நேர்மறையான நம்பிக்கை நிறைந்த தொலைநோக்கு கொண்ட நூலாக இதனை உருவாக்கியுள்ளதாக ஆசிரியர்களைப் பாராட்டினார். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமாக மாற்றிவரும் சூழலில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


தொழில்நுட்பம் என்பது ஒரு பாலமே தவிர, அது பிரிக்கக்கூடியது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். “அனைவரும் ஒன்றிணைவோம்-அனைவரும் உயர்வோம்” எனும் இலக்கை எட்டும் வகையில் அபிலாஷைகள் மற்றும் சாதனைகள், தேவை மற்றும் விநியோகம், அரசு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே தொழில்நுட்பம் பாலமாக இணைப்பை உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார். வேகமாக வளரும் இந்தியாவை உருவாக்க நேர்மறையான எண்ணம், படைப்பாற்றலைக் கொண்ட ஆக்கப்பூர்வமான மனப்பான்மை தேவை என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நோக்கங்களுக்கு இடையே இணைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.


Similar News