காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரால் புகழப்பட்ட பிரதமர் மோடி -' பிரதமர் மோடி இல்லை என்றால் ராமர் கோவில் இல்லை'!
பிரதமர் மோடி இல்லை என்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் புகழ்ந்து இருக்கிறார்.
உத்திரபிரதேசத்தின் அயோத்திய நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள விடுவிக்கப்பட்ட அழைப்பை பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இது பிரதமர் மோடி முன்னின்று நடத்தும் விழா என்பதால் புறக்கணித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதனை அரசியல் நாடகம் என்று விமர்சித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒருவர் பிரதமர் மோடியை புகழ்ந்திருக்கிறார். 'மோடி இல்லை என்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது' என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் பிரதமர் மோடி இல்லாவிட்டால் இந்த கோவில் கட்டப்பட்டிருக்காது. அதனால்தான் ராமர் கோவில் மற்றும் பாலராமர் பிரதிஷ்டைக்கான முழு பெருமையையும் பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்.
பல அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பல பிரதமர்கள் வந்தார்கள் சென்றார்கள். ஆனால் 500 ஆண்டுகால ராமர் கோவிலுக்கான காத்திருப்புக்கு முடிவு கட்ட அரசியல் விருப்பத்தை யாரும் காட்டவில்லை. மகாத்மா காந்தி ராம ராஜ்ஜியம் கனவு கண்டார். அவருடைய கொள்கைகளை வலியுறுத்தும் கட்சியான காங்கிரஸ் ராமருக்கு எதிரான கட்சியாக இருக்க முடியாது. எனவே பா ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர ராமருக்கு எதிராக அல்ல என்று கூறினார்.
தன்னுடைய ஒன்பது ஆண்டு ஆட்சியின் கீழ் பல்வேறு எதிர்ப்புகளை பிரதமர் மோடி சந்தித்த போதிலும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வாயாலயே புகழப்பட்டிருப்பது அவரின் சிறந்த ஆட்சியையும் நேர்மையான நிர்வாகத் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. மோடியின் ஆட்சியில் வளமான வலிமையான ஒரு பாரதம் உருவாகி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை.
SOURCE :DAILY THANTHI