சிறுவர்கள் செய்த கொரோனா விழிப்புணர்வை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து, பாராட்டு.!

சிறுவர்கள் செய்த கொரோனா விழிப்புணர்வை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து, பாராட்டு.!

Update: 2020-04-17 03:45 GMT

இந்தியாவில் தற்போது வரை 12 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 420 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் தடுக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பலரும் ஏற்படுத்தி வரும் நிலையில் சிறுவர்கள் செய்த விழிப்புணர்வை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எப்படி சங்கிலித் தொடர்போல பரவுகிறது மற்றும் அதை எப்படி தடுப்பது என்று செங்கற்களை சரிய விட்டு சிறுவர்கள் விளக்கியுள்ளனர். அதில் ஒரு காட்சியில் செங்கற்களை சரிய விடும்போது அனைத்து செங்கற்களும் விழுந்துவிடுகிறது. இதில் எப்படி கொரோனா வைரஸ் பரவுகிறது என்று காட்டி உள்ளனர்.

இன்னொரு காட்சியில் சரிந்து விழும் செங்கற்கள் மத்தியில் ஒரு செங்கலை எடுத்து விட்டு பரவலை எப்படி தடுப்பது என்று சிறார்கள் விளக்கி உள்ளனர், இதை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது மிகப் பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து இருப்பதாக பாராட்டியுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1250686540298088449?s=19

Similar News