நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி சரமாரி தாக்கு!

நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி சரமாரி தாக்கு!

Update: 2018-12-18 03:06 GMT

ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிகும் தொழிற்சாலையினை பார்வையிட்ட பிரதமர் மோடி இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 900-வது ரெயில் பெட்டியை  கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.


அதனை தொடர்ந்து ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரேபரேலி வளச்சிக்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சி எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க ஆட்சியில் ரேபரேலி தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. கார்கில் போருக்கு பின்னர் நம் நாட்டு விமானப்படையை அதி நவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைத்தும், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இது குறித்து எந்தவித நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.
நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவது, இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

Similar News