21 ஆம் நூற்றாண்டிக்கு ஏற்ப இந்தியாவை கட்டமைக்கும் பிரதமர் மோடி அரசு - ஆட்சித்துறை அதிகாரங்களில் அதிரடியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம்!

21 ஆம் நூற்றாண்டிக்கு ஏற்ப இந்தியாவை கட்டமைக்கும் பிரதமர் மோடி அரசு - ஆட்சித்துறை அதிகாரங்களில் அதிரடியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம்!

Update: 2019-11-05 17:39 GMT

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு 'ஆட்சித்துறையில்' பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முயற்சி எடுத்து வருகிறது. இதன் மூலம் கட்டுக்கோப்பான, உறுதியான அதிகாரம் மிக்கதாக ஆட்சித்துறை விளங்கும். கடந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்திய ஆட்சி துறையில் இருந்த பல்வேறு குறைபாடுகள் களையப்பட உள்ளது.


சிறப்பாக பணியாற்றாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, திறமையான அதிகாரிகள் மட்டும் பணியில் வைத்துக்கொள்ளப் பட உள்ளனர். இதனால் அரசு பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என்றாலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.


இதில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக ஒன்பது தனியார் துறை தொழில்முறை வல்லுநர்கள், இணை செயலாளர் அந்தஸ்துக்கு மத்திய அரசில் இணைக்கப்பட்டுள்ளனர். வருவாய், நிதி சேவைகள், பொருளாதார விவகாரங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிவில் விமான போக்குவரத்து மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளுக்கு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.


முக்கிய அரசாங்கத் துறைகளில் நிபுணத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்புத் திறமைகளைக் கொண்டுவருவதையும், சிறந்த நிர்வாகத்திற்கு பங்களிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


படேல் சிலை அமைந்துள்ள பகுதியில் 430 அலுவலர் பயிற்சியாளர்களுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


இதன் மூலம் படேல் கனவு கண்ட இரும்பு இந்தியா, அடுத்து உறுதியான இந்தியாவாக மாற்றப்படும் கனவை நோக்கி முன்னேறியுள்ளது.


Similar News