பஞ்சாப் மாநிலத்தில் கொரோனவால் காவல்துறை துணை கமிஷனர் பலி - சோகத்தில் பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனவால் காவல்துறை துணை கமிஷனர் பலி - சோகத்தில் பஞ்சாப்

Update: 2020-04-18 13:27 GMT

கொரோனாவால் பாதிப்படைந்த துணை காவல்துறை கமிஷனர் ஒருவர் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 22லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் பஞ்சாபில் 202 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர், 27 பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் 13 பேர் இறந்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் துணை காவல்துறை கமிஷனராக வேலை பார்ப்பவர் அனில் கோலி. இவருக்கு 52 வயது ஆகிறது. இவர் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. பின்னர் அவர் இன்று சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். மேலும் இந்தியாவில் பலியான முதல் காவல்துறை அதிகாரி இவர் தான்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2523451

Similar News