28ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

வரும் ஜூலை 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

Update: 2022-07-14 01:57 GMT

வரும் ஜூலை 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர் விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 28'ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 28ஆம் தேதி பிரம்மாண்டமாக 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது, இந்த போட்டியானது சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் இதனால் பிற நாடுகளின் கவனம் தமிழகம் மீது திரும்பி உள்ளது.

இந்த போட்டிக்கான ஜோதியை பிரதமர் மோடி ஏற்கனவே டெல்லியில் துவங்கி வைத்த நிலையில் தற்போது இந்த போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தருவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Similar News