ஒடிசாவில் ரூபாய் 68,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி- உத்தரவாதங்களுக்கு எல்லாம் உத்தரவாதம் மோடியின் உத்தரவாதம்!
ஒடிசாவில் ரூபாய் 68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஒடிசாவில் ரூபாய் 68 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூர்த்தி அடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக சம்பல்பூர் ஐஏஎஸ் நிறுவனத்திற்கு நிரந்தர வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி மின்சாரம், சாலைகள் மற்றும் ரயில்வே துறை திட்டங்களையும் தொடங்கி வைத்தார் .
அந்த வகையில் புரி- சோன பூர் புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 412 கிலோமீட்டர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் .2,450 கோடியில் பிரதம மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தில் கட்டப்பட்ட இந்த திட்டம் ஒடிசாவை தேசிய கியாஸ் கட்டகத்துடன் இணைக்கும்.இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது :-
மோடியின் உத்தரவாதம் என்றால் உத்திரவாதங்களுக்கு எல்லாம் உத்தரவாதமாகும். ஏனெனில் நாடு முழுவதும் உள்ள உதவியற்ற மக்களின் கடைசி நம்பிக்கையாக எங்கள் அரசு இருக்கிறது. இளைஞர்கள் ,பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரின் வளர்ச்சிக்கு சமீபத்திய பட்ஜெட் உத்திரவாதம் வழங்கி இருக்கிறது .பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் ஒடிசாவின் 40 லட்சம் விவசாயிகள் உட்பட கோடிக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர் .
கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒடிசா விவசாயிகள் ரூபாய் 30,000 தங்கள் வங்கி கணக்குகள் மூலம் பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசுகள் ஒடிசாவில் இருந்து வெறும் 36 ஆயிரம் கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்திருந்தன. ஆனால் தற்போதைய அரசு ரூபாய் 1.10 லட்சம் கோடி அளவிலான நெல்லை கொள்முதல் செய்து இருக்கிறது. விவசாயிகளுக்கு உண்மையான அதிகாரம் அளித்தலை நோக்கமாகக் கொண்டு பா.ஜனதா தீவிரமாக செயல்படுவது இதற்கு காரணமாகும். மீனவ சமூகத்தையும் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பா. ஜனதா அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் வீட்டின் மேற்கூறையை சோலார் மயமாக்கும் திட்டத்திற்கு ரூபாய் பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க அரசு உறுதி கொண்டுள்ளது. மேற்கூறிய சோலார் திட்டம் மூலம் மக்கள் கட்டணமின்றி மின்சாரம் பயன்படுத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI