வரலாற்று சிறப்புமிக்க 5ஜி இணைய சேவை - அக்டோபர் 1ம் தேதி கோலாகலமாக பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் 5g சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் 5g சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
இந்தியாவில் 5ஜி அலைவரிசைக்கான ஏலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் அதிவேக இணைய சேவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய தொழில் நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் கண்காட்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை துவங்கி வைக்க உள்ளதாக தகவல் தொழில் தொடப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் 5ஜி தொலைத்தொடர்பு வசதிகளை 80 சதவீதம் வரை விரிவுபடுத்த மத்திய அரசு இலக்கு நிறுத்து உள்ளதாக மத்திய தொலைதொரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.