உலக நாட்டு தலைவர்கள் மத்தியில் 'ஒரே பூமி, ஒரே குடும்பம்' என்று கர்ஜித்த பிரதமர் மோடி!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 நிறைவு நிகழ்ச்சிகள் பேசிய பிரதமர் மோடி, 'ஒரே பூமி, ஒரே குடும்பம்', ஒரே எதிர்காலம்' இன்று முழக்கத்தை வலியுறுத்தினார்.

Update: 2022-11-17 03:39 GMT

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 நிறைவு நிகழ்ச்சிகள் பேசிய பிரதமர் மோடி, 'ஒரே பூமி, ஒரே குடும்பம்', ஒரே எதிர்காலம்' இன்று முழக்கத்தை வலியுறுத்தினார்.

ஜி 20 மாநாடுகளின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, 'எனது நண்பர் அதிபர் ஜோக்கோவிச்சுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான தருணங்களில் கூட ஜி 20 அமைப்பில் மிகச்சிறந்த தலைமை வகித்து அவர் அழைத்துள்ளார். இந்தியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டதற்காக ஜி 20 உறுப்பினர்களுக்கு நான் இன்று நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புவியியல் பதற்றங்கள், பொருளாதார வீழ்ச்சி. உணவு மற்றும் எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு மற்றும் நீண்ட கால விளைவுகள் என உலகம் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கிறது. அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து ஜி 20 அமைப்பு தீர்க்கத்துடன் தெரிவிக்க வேண்டும். இந்த முன்னுரிமைகள் அனைத்தும் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவதில் இருக்கும். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளில் முழுமையாக அடங்கியுள்ளது. ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்த தருணம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கிறது' என்றார்.


Source - One India 

Similar News