அயல்நாடுகளுடனும் நல்லுறவை வலுப்படுத்தும் பிரதமர் மோடி!

நான்கு நாள் பயணமாக தான்சானியா அதிபர் இந்தியாவிற்கு வருகை புரிந்து பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

Update: 2023-10-11 12:00 GMT

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் சமியா சுலுகு ஹசன் நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி மாளிகையில் இன்று அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். முக்கியமாக டெல்லியில் நாளை நடைபெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் மன்ற நிகழ்விலும் அவர் கலந்து கொள்கிறார்.

இந்தியா தான்சானியா உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளதாகவும் அதிபராக பதவியேற்றபிறகு அவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

SOURCE : DAILY THANTHI

Similar News