ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோவிலை திறந்து வைக்க 13-ஆம் தேதி பிரதமர் மோடி பயணம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி 13-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Update: 2024-02-12 05:15 GMT

ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை 13-ம் தேதி செல்ல உள்ளார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி சென்று அடைந்தபோது பட்டத்தை இளவரசர் ஷேக் முகமது நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோவில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.


மேலும் கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கியது. 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயணன் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த கோவில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மார்பிள்ஸ் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பில் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மொத்தம் ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன .நிலநடுக்கம் மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோவிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது .


கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. போச்சன்வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா புருஷோத்தம் ஸ்வாமி நாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பில் இந்த சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவிலை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை 13-ம் தேதி மற்றும் 14-ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.


அபுதாபியில் அமைந்துள்ள முதல் இந்து கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் பயணத்தின் போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும் அமீரகத்தின் துணை அதிபர் , பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Dinamani

Similar News