அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது - இந்தியா முழுவதுக்கும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு : பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது - இந்தியா முழுவதுக்கும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு : பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

Update: 2020-04-14 04:50 GMT

மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. வரும் 14-ம் தேதியுடன் முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30 ஆம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

மே 3ந் தேதி ஊரடங்கு முடிவடையும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Similar News