பிரபல தொழிலதிபர் எம்.ஜி.எம் மாறனின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

அமலாக்கத்துறை பிரபல தொழிலதிபர் எம்.ஜி.எம் மாறனின் சொத்துக்களை முடக்கியுள்ளது.

Update: 2022-12-27 12:49 GMT

அமலாக்கத்துறை பிரபல தொழிலதிபர் எம்.ஜி.எம் மாறனின் சொத்துக்களை முடக்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்.ஜி.எம் மாறனுக்கு சொந்தமான சுமார் 205.36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. மாறன் கடந்த 2005-2006 மற்றும் 2006-2007 ஆண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள ஏழு நிறுவனங்களில் 5 கோடியே 29 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் முதலீடு செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எம்.ஜி.எம் மாறனின் சொத்துக்கள் சுமார் 205.36 கோடி மதிப்புள்ளவை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜி.எம் மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மாறன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.


Source - Polimer News

Similar News