'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் எரிப்பு வரை சென்ற கலவரம் - என்ன நடந்தது பீகாரில்?
'அக்னிபத்' திட்டத்துக்கு பீகாரில் எதிர்ப்பு தெரிவித்த நடந்த போராட்டம் தீவிரமடைந்து ரயில் எரிப்பு சம்பவம் வரை சென்றுள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'அக்னிபத்' திட்டத்துக்கு பீகாரில் எதிர்ப்பு தெரிவித்த நடந்த போராட்டம் தீவிரமடைந்து ரயில் எரிப்பு சம்பவம் வரை சென்றுள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14ஆம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமானது 'அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சில இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என பீகாரில் ராணுவ பணிக்காக தயாராகி வந்த இடங்களை இளைஞர்கள் பலர் தொடர்ந்து 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்து சாலை மறியல், ரயில் மறியல், ரயில் எரிப்பு போன்ற சம்பவமாக தீவிரமடைந்தது.
பாட்னாவின் பாப்புவா ரோடு ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ஒரு கும்பல் பெட்டிக்கு தீ வைத்தது, மேலும் ஆர்ரா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்த போராட்டக்காரர்களின் பெரும் கூட்டத்தை கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர்.
போராட்டக்காரர்கள் மரச்சாமான்களை தண்டவாளத்தில் வீசி எறிந்ததால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ஜெகன்னாபாத் பகுதியில் ரயில் தண்டவாளத்தை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடுக்க முயற்சித்த காவல்துறை கல்லெறிந்து தாக்குதல் சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கலவரம் மூண்டது இதில் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
நவாடாவில் இளைஞர்கள் டயர்களை எரித்து அதன் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.