ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டிற்கான இலவச ரேஷன் பொருட்கள்வழங்க உத்தரவிட்ட மோடி அரசு!

தற்போது இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கான வழங்கப்படும் ரேஷன் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல்.

Update: 2022-12-25 02:00 GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்காக ஒப்புதல் அளிக்கப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அடுத்த ஓராண்டிற்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ஒப்புதல் இருக்கிறது. நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இதில் அரிசி மூன்று ரூபாய்க்கும், கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்பட்ட வருகிறது.


இனிமேல் இது ஓராண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என்று கூறுகிறீர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழு முழுவதும் 81 புள்ளி 35 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் இதன் மூலம் அதிக அரசிற்கு ஆண்டிற்கு இரண்டு லட்சம் கோடி செலவாகும் எனவும் மத்திய உணவு அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்த கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை வழங்கப்பட்டு வரும் ரேஷன் இலவச ரேஷன் திட்டத்தை மேலும் தொடர்வதில்லை என அரசு முடிவு செய்து இருக்கிறது.


இதைப்போல பாதுகாப்பு ஓய்வுதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட ஒரு பதவி ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அமைச்சரவை சபை ஒப்புதல் அளித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி இருக்கிறார். 

Input & Image courtesy:News

Tags:    

Similar News