அ.தி.மு.க ஆட்சியில் துவங்கிய பணியை ஆமை வேகத்தில் நடத்தாதீர்கள் - தி.மு.க அரசுக்கு எதிராக கிளம்பும் விவசாயிகள்

காவிரி குண்டாறு தெற்கு வெள்ளாறு இணைப்புக்கான வாய்க்கால் வெட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-05 13:53 GMT

காவிரி குண்டாறு தெற்கு வெள்ளாறு இணைப்புக்கான வாய்க்கால் வெட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


காவிரி வைகை குண்டாறு நதிநீர் இணைப்பின் முதற்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் கதவனை கட்டப்பட்டுள்ளது, மழைக்காலத்தில் வீணாக சென்று கடலில் கடக்கும் நீரை வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டாறு கொண்டு செல்லும் வகையில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக காவிரியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை கால்வாய் வெட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அ.தி.மு.க தொடங்கப்பட்டது, மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கத்தினர் காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் சங்க தலைவர் துரைராஜ் ஆகியோர் நேரில் சென்று அந்த பணிகளை பார்வையிட்டனர்.


பார்வையிட்ட அவர்கள் கூறியதாவது, 'காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது, தெரிகிறது இதற்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கி பணியை விரைவு படுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்.


Source - News 18 Tamil Nadu

Similar News