தசரா பண்டிகையில் இந்தியா வருகிறது ரபேல்!

தசரா பண்டிகையில் இந்தியா வருகிறது ரபேல்!

Update: 2019-09-11 03:11 GMT

இந்திய விமானப் படைக்கு பிரான்சைச் சேர்ந்த, ‘டசால்ட்’ நிறுவனத்திடம் ரபேல் ரக அதி நவீன போர் விமானங்கள் வாங்க 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது . இந்த வகை போர் விமானம் 2 இரட்டை என்ஜின் கொண்ட அதி நவீன விமானம். வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது போல பல அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்.


அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் தசரா பண்டிகையும் கொண்டாடப உள்ளது. இவ்வளவு முக்கியமான நாளில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஷ் சென்று ரபேல் போர் விமானங்களை பெற்றுக் கொள்கின்றனர். டசால்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என அரசு தகவல்கள் கூறுகின்றன.


இதற்கு முன் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் இந்திய விமானப்படை தளபதி தன்னோவா மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள், பிரான்ஸ் சென்று ரபேல் விமானங்களை, பெறுவதற்கான பெற்று ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவார்கள்.


அக்டோபர் 8 தேதி இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்படும். , ரபேல் விமானங்களில் இந்தியா குறிப்பிட்டடுள்ள சிறப்பு கருவிகள் இணைத்தல் போன்ற கூடுதல் இணைப்புகள் எல்லாம் முடிய மே மதம் ஆகக்கூடும். அப்போது தான் இந்தியாவிற்கு ரபேல் வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . போர் விமானங்கள்,


ரபேல் விமானங்களை இயக்க விமானிகள் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் பயிற்சி காலமும் 2020 மே வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


Similar News