ராமநவமி அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் !

ராமநவமி அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் !

Update: 2019-11-12 09:15 GMT

அயோத்தியில்  நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது, 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்; அந்த இடத்தை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு நியமிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளையை, மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 



இதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமி வருகிறது. அன்று கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, 2.77 ஏக்கர் நிலம், புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத் தவிர, அங்கு மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள, 62.23 ஏக்கர் நிலமும், அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.


Similar News