தமிழகத்தில் சிறப்பாக வலம் வரும் ராம ரத யாத்திரை - இதற்கு முன் இல்லாத அளவிற்கு கூடும் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் ராம ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் ராம ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகில பாரதிய சந்த் ஸ்மிரிதியின் ஹிந்து தர்மசேனா அமைப்பின் சார்பில் அயோதியிலிருந்து நாடு முழுவதும் ராம ரத யாத்திரை உலா வருகிறது.
அதன்படி சேலத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் ராம ரத யாத்திரை நேற்று கள்ளக்குறிச்சிக்கு வந்தது. கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் ரத யாத்திரைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க'வினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மூங்கில் பாடி ரோடு வழியாக ஊர்வலம் சென்று ஆஞ்சநேயர் கோவில் முன்பு சிறப்பு பூஜை நடந்தது.
இதற்கு முன் இல்லாத அளவிற்கு ராம ரத யாத்திரை சிறப்பான வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் வலம் வருகிறது.