சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்!

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்!

Update: 2020-04-01 06:08 GMT

'ஜோக்கர்' படத்தில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு, இவருக்கு சரியான படங்கள் அமையாத நிலையில் இவரின் ஃபோட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலனாது. சமீபத்தில் தனியார் தொலைகாட்சியில் ரியலிடி ஷோவில் பங்கேற்றார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவரை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்கள் பின் தொடந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருப்பவர் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது, அவர் அடுத்து நடிக்கும் படங்கள் பற்றிய ரசிகர் கேள்விக்கு சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்திலும், CV குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Similar News