சீர்திருத்த நடவடிக்கைகளால் விரைவில் முழு பலன்: இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது!!

சீர்திருத்த நடவடிக்கைகளால் விரைவில் முழு பலன்: இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது!!

Update: 2019-10-21 05:06 GMT


கட்டுரை ஆசிரியர் சையத் ஜாபர் இஸ்லாம் (Syed Zafar Islam) டாய்ச் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர்.   தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை (ஆகஸ்டு 29, 2019)  


ரூபாய் நோட்டுக்கள் மதிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி போன்ற தைரியமான நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் முந்தைய முறைசாரா பொருளாதாரத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வருகிறது. இது சுணக்கம் போல தெரிந்தாலும் இன்னும் சில காலங்களில் நவீன பொருளாதாரமாக பாய்ச்சல் எடுத்து நிரந்தர பிரச்சனைகளை நீக்கி முன்பை விட முன்னேற்றப் பாதையில் செல்லும் என இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.


இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இன்று உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு மையப் புள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் உலகளவில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துவருகின்றன என்பதை எந்தவித ஆச்சரியமுமின்றிச் சொல்லலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் நரேந்திர மோடியின் இந்தியா பெற்ற 250 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு, 2014 க்கு முந்தைய 14 ஆண்டுகளில் பெற்ற அந்நிய முதலீட்டிற்கு சமமாகும். ஆயினும், தற்போதுஇந்திய கார்ப்பரேட் உலகின் நம்பிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது என்று சொல்லலாம். உலகளாவிய பொருளாதாரத் தாக்கங்களே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.


எதிர்ப்பாளர்கள் சொல்வதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி தன்னிடம் கூடுதலாக உள்ள தொகை (சர்ப்லஸ்) 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசிடம் ஒப்படைத்து தனது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது. தேசிய நலனை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்லாமல் முதலீடு மற்றும் துறைசார் முன்னேற்றங்களைத் தூண்ட உதவுகின்றது.


பொருளாதாரம் எட்டு சதவிகித வளர்ச்சியை அடைய அரசாங்கம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தனியார் துறையினர் இதே வேகப் பசியைக் காட்டுவதாய் தெரியவில்லை.


இந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்.


உலக அளவில் பொருளாதாரத்தில் ஆறாவதாக இருக்கும் இந்தியா நீண்ட கால உயர் வளர்ச்சிக்குப் பின் சோர்வை உணர்ந்திருப்பதாக பலர் கூறுகின்றனர். உலக அளவில் முதல் 3-4 இடங்களில் உள்ள பொருளாதாரங்களை விட, தற்போது கணிக்கப்பட்ட 6.30 சதவீத வளர்ச்சியிலும் கூட இந்திய பொருளாதாரம் ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு காலாண்டில் ஏற்பட்ட அந்த 5.8 சதவிகிதம் பின்னடைவு நம்மை பெரிய அச்சங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.


சுருங்கச் சொன்னால், பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது, ஆனால், பெயரிடப்படாத மர்மத்துகுள் நாம் இன்னும் நுழையவில்லை .


மோடி முதன்முதலாக பிரதமராக பதவியேற்கும் போது, பெருமளவில் ரூபாய் நோட்டு பொருளாதாரத்தில் (cash economy) இயங்கும் முறைசாரா/அமைப்புசாரா துறை ஏற்படுத்திய தெளிவற்ற குழப்பங்களே இந்தியாவின் பொருளாதார இயல்பாய் இருந்தது. 1990-களுக்கு பின் இந்தியா என்பதற்கான அடையாளம் மாறியிருந்தாலும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் பெரும்பகுதியில் மாற்றங்கள் வந்த பாடில்லை. மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் முறைசாரா இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்திய பொருளாதாரமாக மாற்றினார்.


சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் பருவநிலை நமது பொருளாதார மந்தநிலைக்கு பெரும் காரணியாய் இருந்து வருவதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த காரணி பொருளாதாரம் தொடர்பான விவாதத்தில் மௌனமாய் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்ல வேண்டும் .


மேலும், தேர்தலின் போது நடத்தை விதி கட்டாயப்படுத்தப்படுவதால், அரசாங்கத்தால் திட்டங்களுக்கு செலவிடவோ அல்லது பெரிய சீர்திருத்தங்களை அறிவிக்கவோ முடியவில்லை. இதனால், தேர்தல்களும் மந்தநிலைக்கு பங்களித்திருக்கலாம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.


உதாரணமாக, முதலீட்டு குறியீட்டின் (கேபெக்ஸ்) வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்த 12 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 பிபிஎஸ் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், உலகளாவிய பொருளாதார போக்கு, மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.


நீங்கள் திகைக்காமலும் பதட்டப்படாமலும் இருந்தாலே அது உங்கள் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும். நமது பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார (மேக்ரோ) குறியீடுகள் அனைத்தும் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பதான தகவல்களையே தருகின்றன. பொருளாதாரக் குறியீடுகளை சற்று கவனியுங்கள்: அந்நிய செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 491 பில்லியன் டாலர். சில்லறைபணவீக்கம் (சிபிஐ) பணவீக்கம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளது. இன்னும், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த சிபிஐ கடந்த 12 மாதங்களாக 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. முக்கிய பணவீக்கம் (கோர்) கடந்த 12 மாதங்களில் சொல்லும்படியளவிற்கு சரிந்துள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீடு 12 மாத கால அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதமாக உள்ளது.


முந்தைய மாதத்தின் மந்தநிலையுடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்திற்கான பிஎம்ஐ உற்பத்தி மற்றும் சேவைகள் முன்னேற்றம் கண்டன. பொருளாதாரம் முன்னேற்றத்தைக் அடைந்து வருகிறது என்பதையும், வேலைவாய்ப்பு துரிதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் இது நமக்கு அறிவுறுத்துகிறது.


தொழில்துறையில் இருக்கும் சிலர், கடன் வாங்குபவர்- வழங்குபவர்களுக்கு இடையிலான நம்பிக்கை தேய்மானம் அடைந்திருப்பதாக வாதிட்டனர். இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். நமது நிதி அமைச்சகம் இதை காது கொடுத்து கேட்டு பொதுத்துறை நிறுவன வங்கிகளுக்கு ரூ .70,000 கோடியை ஒதுக்கியது. இந்த நிதியை பொதுத் துறை வங்கிகள் ஏழு மடங்கு லிவரேஜ் செய்யும் என்ற கணிப்பில் பார்த்தால், வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை தொழில் முனைவோருக்கு கடனாய் வழங்க முடியும்.


நல்ல பருவமழை வரவிருக்கும் காரணத்தால் அரசாங்க செலவீனம் மிகவும் பயனுள்ளதாய் அமையப் போகிறது. பண்டிகை காலத்திற்குள் நாம் நுழைவதால் நுகர்வு உயரும். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், முதலீட்டிலிருந்தும், டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வதிலிருந்தும் பொருளாதார வளர்ச்சி மேம்பட்ட வளர்ச்சியில் செல்லப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை . இந்த ஆண்டுக்கான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்கு ரூ .1.14 லட்சம் கோடியைக் கடக்கும் என்று நம்பிக்கை அரசாங்க மத்தியத்தில் நிலவி வருகிறது.


தற்போதைய பொருளாதாரக் கணிப்பு , அடுத்த காலாண்டும் அதற்கு பிறகும் அச்சுருத்துவதாக இல்லை என்றாலும் இரட்டை இலக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களால் தொடர்ந்து வியாபாரத்தை எளிதாக்கி கொண்டிருக்கிறார். சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.5 சதவிகிதமாகவும், டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ.70 -ல் தக்க வைத்துக் கொண்டாலே 2024/2025 க்குள் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவது சாத்தியம் என்றே சொல்ல வேண்டும்.


Similar News