மீட்பு படை மின்னல் வேகம்! 1500 பயணிகள் மீட்பு! பா.ஜ.க அரசிற்கு மக்கள் பாராட்டு!

மீட்பு படை மின்னல் வேகம்! 1500 பயணிகள் மீட்பு! பா.ஜ.க அரசிற்கு மக்கள் பாராட்டு!

Update: 2019-07-28 06:02 GMT

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழைபெய்து வருகிறது, இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு
ஓடுகிறது சாலைகளில் மட்டுமில்லாமல் தண்டவாளங்களில் வெள்ளம் ஓடுகிறது. பல இடங்களில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி, வெள்ளம் சூழ்ந்துள்ளது.


இந்நிலையில் மும்பையில் இருந்து கோலாப்பூர் செல்லும் இரயில் மஹாலட்சுமி எக்ஸ்பிரஸ், நேற்று காலை, தானே மாவட்டம், பட்லாபூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, நடுவழியில் வெள்ளத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் ஓடும் வெள்ளத்தை மீறி, ரயிலை ஓட்ட முடியவில்லை.






இரயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது மின்னல் வேகத்தில் செயல்பட்ட மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர். பின் பயணியரை, படகுகள் மூலம் மீட்டு, பட்லாபூர் ரயில் நிலையத்தில் சேர்த்தனர்.


மும்பை முழுவதும் மீட்பு படையினர் முழு வீச்சில் செயல்படுகின்றன. மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன மழையால், மும்பை நகரில், சியான், மாதுங்கா, மஹிம், அந்தேரி, மலாட், தஹிசார் ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.






மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், மும்பையில் தரையிறங்க வேண்டிய, ஒன்பது விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையத்துக்கு மாற்றி விடப்பட்டன.


தானே மாவட்டத்தின் பல இடங்களில், சிக்கித் தவித்த, 100க்கும் மேற்பட்டோரை, விமானப் படையினர், ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். பட்லாபூர் நகருக்குள் வெள்ளம் புகுந்ததால், வீடுகளில் இருந்தவர்கள், மொட்டை மாடிக்கு சென்றனர்.






பெட்ரோல் பங்க் ஒன்றின் மொட்டை மாடியில் தவித்த, 70 பேர் மற்றும் சொகுசு விடுதியின் மாடியில் தவித்த, 45 பேரை, விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.


இங்கு பா.ஜ.க அரசு ஆட்சியில் இருந்து வருகிறது.என்பது குறிப்பிடதக்கது


Similar News