BSNL மூடப்படுவதாக பரவிய தகவலில் உண்மை இல்லை, வதந்திகளை நம்பவேண்டாம் - பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்!

BSNL மூடப்படுவதாக பரவிய தகவலில் உண்மை இல்லை, வதந்திகளை நம்பவேண்டாம் - பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்!

Update: 2019-02-15 10:27 GMT

BSNL நிறுவனம் மூடப்படுவதாக பரவிய தகவலை அடுத்து வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், BSNL வாடிக்கையாளர்கள் மத்தியிலும்  குழப்பம் ஏற்பட்டது. 


இந்த நிலையில், BSNL நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- "BSNL நிறுவனத்தை மூட இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தற்போதைக்கு, அரசிடம் இது போன்ற எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரானவர்களும், சில தொழிற் சங்கங்களை சேர்ந்த யூனியன்களும் மக்களையும், BSNL தொழிலாளர்களையும் குழப்பவும், மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் இவ்வாறு தகவல் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.



Similar News