பிரதமர் மோடி தலையிட்டதால் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் தவிர்ப்பு!

பிரதமர் மோடி தலையிட்டு சமரசம் செய்ததன் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-13 11:55 GMT
பிரதமர் மோடி தலையிட்டதால் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் தவிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் உக்கரைன் மீது ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தவிர்க்கப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டைச் சேர்ந்த சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சி.என்.என் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :-


கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் உக்ரைன்  மீது அணு ஆயுத  தாக்குதல் நடத்த ரஷ்யா தயாரானது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதை அடுத்து இந்தியா சீனா நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க தரப்பு தொடர்பு கொண்டு பேசிய  தாக்குதலை தடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டது. இதை அடுத்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசினார்.


அப்போது அனு ஆயுதத்த தாக்குதலை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .இதன் காரணமாகவே உக்கரை நாடானது அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பியது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உக்கிரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து நாட்டுக்கு ஆயுதம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை .ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் இருந்து இந்தியா விலகியே இருந்து வருகிறது. அதே நேரத்தில் இது போருக்கான காலகட்டம் இல்லை என்றும் போரை தவிர்க்க வேண்டும் என்றும் புதினுக்கு மோடி இருமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.


SOURCE :Dinamani

Similar News