சபர்மதி ஆசிரம நினைவு இல்லத்தில் ரூபாய் 1200 கோடியில் மறு சீரமைப்பு திட்டம்- தொடங்கி வைத்த மோடி!
குஜராத் சபர்மதி ஆசிரம நினைவு இல்லத்தில் ரூபாய் 1200 கோடி செலவில் செய்யப்படும் பெரும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
பிரதமர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி சிலைக்கு மரியாதை செய்தார். அங்கு நடைபெற்ற விழாவில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரம நினைவு இல்லத்தை மறுசீரமைக்கும் பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 1200 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கிய நாளில் இந்த நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி பேசியதாவது :-
தனது பாரம்பரியம் குறித்து பெருமை படாதநாடு தனது எதிர்காலத்தையும் இழக்கும். காந்தியின் சபர்மதி ஆசிரமம் நாட்டுக்கு மட்டும் பாரம்பரிய சின்னமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பாரம்பரிய சின்னமாகும். சுதந்திர போராட்டத்திற்கு மட்டுமின்றி வளர்ந்த இந்தியாவுக்கும் புனித தளமாக திகழ்ந்தது. காந்தியின் தொலைநோக்கு பார்வை நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு தெளிவான பாதையை காட்டுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த அரசுகளுக்கு நாட்டின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற அரசியல் உறுதி இல்லை. அந்த அரசுகள் வெளிநாட்டு கண்ணோட்டத்தில் இந்தியாவை பார்த்தனர். சபர்மதி ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டியது 140 கோடி இந்தியர்களின் பொறுப்பு.
கிராமம் சுயராஜ்யம் குறித்தும் தற்சார்பு இந்தியா குறித்தும் காந்தி கனவு கண்டார்.அவை எங்கள் அரசுக்கு உந்து சக்தியாக இருக்கின்றன. சிலர் எங்கள் முயற்சிகளை தேர்தல் கண் கொண்டு பார்க்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைப்பதற்காக நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கவில்லை. நாட்டை கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே பணிகளை செய்கிறோம். கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் 11 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI