குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கும் ஒடிசா சாதுக்கள்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கும் ஒடிசா சாதுக்கள்

Update: 2020-01-04 19:38 GMT

ஒடிசாவைச் சேர்ந்த சந்தா சமாஜாவின் 9 வது ஆண்டு விழா புவனேஷ்வரில் பண்டாராவின் ஸ்ரீ கீதை மந்திராவில் கொண்டாடப்பட்டது. கூட்டத்திற்கு சுவாமி பிரம்மாநந்தா சரஸ்வதி தலைமை தாங்கினார். சுவாமி பகவதானந்தா சரஸ்வதி மற்றும் சுவாமி சம்பூர்ணாந்தா சரஸ்வதி ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். சாதுக்கள் எப்போதுமே தங்கள் வாழ்க்கையை சமுதாயத்திற்காக அர்ப்பணிப்பவர்கள். அதன்படி, சாதுக்கள் சமுதாயத்துடனும் அரசாங்கத்துடனும் இனைந்து நமது இந்து கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமாக இது கருதப்படுகிறது.


சந்தா சமாஜாவின் அனைத்து உறுப்பினர்களும் C.A.A தொடர்பான மத்திய அரசு பணிகளைப் பாராட்டினர். சாதுக்கள் அனைவரும் C.A.A - வை ஆதரித்தனர். சாரதா நிகேதனாவின் சுவாமி பிராணரூபானந்தா சரஸ்வதி மற்றும் பீகார் யோகா பள்ளியைச் சேர்ந்த சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி ஆகியோர் சமாஜாவின் வாழ்நாள் சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


யோக வித்யா குருகுளத்தைச் சேர்ந்த சுவாமி ஆனந்தா சரஸ்வதி உட்பட பல சாதுக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 சிறுபான்மையினர்கள் உட்பட பல பிரிவினரின் ஆதரவைக் காண்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாதுக்களின் இந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




https://www.instagram.com/p/B65WWwgF9xK/?igshid=11j96ck9eyenb


குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக சாதுக்கள் கோஷம் எழுப்பியதன் காணொளி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


Similar News