சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடக்கம்!

சூர்யா மின்சக்தி உற்பத்தி செய்யும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2024-02-14 17:15 GMT

தங்கள் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவி, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான 'பிரதம மந்திரி சூரிய கார் - முப்தி பிஜிலி யோஜனா' என்ற திட்டம் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


நிலையான வளர்ச்சியையும் மக்கள் நலனையும் அதிகரிக்க பிரதம மந்திரி சூரிய சக்தி இலவச மின்சார திட்டம் தொடங்கப்படுகிறது . இதற்கு ரூபாய் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. தங்கள் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளை உற்பத்தி செய்யும் ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்கு கணிசமான மானியமும் அதிக சலுகைகளுடன் வங்கி கடன்கள் அளிக்கப்படும். பொது மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். அவர்களுக்கு எந்த நிதிச் சுமையும் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்.


இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்கட்டணம் குறையும். வேலைவாய்ப்பு உருவாகும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தேசிய ஆன்லைன் வலைதளம் மூலம் இணைக்கப்படுகிறார்கள். திட்டத்தை கீழ்மட்ட அளவில் கொண்டு செல்ல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் ஊராட்சிகளும் ஊக்குவிக்கப்படும். எனவே சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்திட்டத்தை வலுப்படுத்துமாறு பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News