கோவையில் ஊரடங்கை மீறி நுழைவுத் தேர்வு வைத்த மிஷினரி பள்ளிக்கு சீல்

கோவையில் ஊரடங்கை மீறி நுழைவுத் தேர்வு வைத்த மிஷினரி பள்ளிக்கு சீல்

Update: 2020-06-09 12:17 GMT

கொரோனோ பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவை மீறி ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்திய கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் சுமார் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மிஷினரி பள்ளிக்கு நுழைவு தேர்வு நடந்தது தொடர்பான காணொளியும், வினாத்தாள்களும் வெளியாகியது.

ஊரடங்கு சமயத்தில் மாணவர்களை வரவழைத்து தேர்வு நடத்தி அலட்சியமாக செயல்பட்டதாக சிஎஸ்ஐ பள்ளி நிர்வாகம் மீது புகார் எழுந்த நிலையில், பள்ளியில் ஆய்வு நடத்திய முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

கொரோனா பாதிப்புக்கு அஞ்சி பொதுத்தேர்வே ரத்து செய்யப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், 6-ஆம் வகுப்புக்கு ரகசியமாக நுழைவு தேர்வு நடத்திய மிஷினரி பள்ளிக்கு சீல் வைத்தது பெற்னோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

Similar News