நாங்கள் உங்களுடன் சேர்ந்து அரசியல் செய்வதா ? மம்தாவுக்கு கம்யூனிஸ்டுகள் மூக்குடைப்பு !!

நாங்கள் உங்களுடன் சேர்ந்து அரசியல் செய்வதா ? மம்தாவுக்கு கம்யூனிஸ்டுகள் மூக்குடைப்பு !!

Update: 2019-06-28 05:40 GMT


மேற்கு வங்கத்தில் மம்தாவின் திருணாமுல் காங்கிரசை எதிர்த்து வெகு வேகமாக பாஜக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்திலும் மம்தா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி அதிக இடங்களை பாஜக பிடித்துள்ளது. தினமும் மம்தா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஏராளமான தொண்டர்களுடன் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இது வரை 6 எம் எல் ஏ க்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மம்தா கட்சியை பாஜக வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.


இதைக் கண்டு மிரண்டு போன மம்தா பா.ஜ.க,வை எதிர்ப்பதற்காக, மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., - காங்., கட்சிகள், தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் எங்கள் கட்சியை, அரசியல் எதிராளியாக மட்டும் பார்க்கவில்லை; விரோதியாக பார்க்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது அர்த்தமில்லாதது. சாத்தியமில்லாதது என்று கூறினார் மார்க்., கம்யூ., மூத்த தலைவர் எஸ்.சுதாகர் ரெட்டி.


Similar News