மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டது: விரைவில் தொகுதிகள் அறிவிக்கப்படுகிறது !

மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டது: விரைவில் தொகுதிகள் அறிவிக்கப்படுகிறது !

Update: 2019-02-18 14:04 GMT

மராட்டியத்தில் சிவசேனா – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை பாஜக தலைவர் அமீத்ஷா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், விரைவில் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றும் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.  


 மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருகட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்கிற தொகுதி விவரங்களை அறிவிக்க உள்ளது.


இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “இன்று மாலை உத்தவ் தாக்கரேவை, அமித் ஷா சந்தித்துப் பேசுகிறார். அப்போது தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பார்கள் " என கூறினார்.  மராட்டியத்தில் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட இருகட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தை அடுத்து மராட்டியம் அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News