மகிழமரத்தில் இத்தனை மருத்துவ பயன்களா?
மகிழமரத்தின் மருத்துவகுணங்களும் அதன் பயன்களும்
ஆன்மீக காரணங்களுக்காக மட்டுமின்றி இதர பயன்களுக்காகவும் மகிழமரம் பாதுகாக்கப்படவேண்டும்.
கோவில் தவிர்த்து வீடுகள் பொது இடங்களில் இந்த மரம் வளர்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த மரத்துக்கு கார்பன்-டை-ஆக்சைடை நிலைப் படுத்தும் திறனும் ஒளிச்சேர்க்கை திறனும் மிகவும் சிறப்பாக இருப்பதால் பகலில் இதன் நிழலில் அதிக ஆரோக்கியமான சூழலை பெறலாம் கார்பன் மாசுபாட்டை குறைக்க முக்கியமான மரங்களில் மகிழ மரமும் ஒன்று.
மகிழம்பூவின் எண்ணைய் தனியாகவோ,சந்தன எண்ணையுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றில் நறுமணம் ஊட்டி ஆக செயல்படுகிறது.
இதன் பூ சாறு பசியை தூண்டும் வீக்கத்தை குறைக்கும். இந்த மரத்தின் பட்டை அல்லது பட்டைகொண்ட குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும் என்றும் ஈறு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
மகிழம்பழம் உண்ண தகுந்தது. விதை எண்ணெய உணவுக்குழாய் கோளாறுகளையும், மூட்டு வீக்கங்களையும் நீக்குகிறது.
விதையின் பொடி கபம் பித்தத்தைப் போக்குகிறது விஷம் அறிவுக்கும் பயன்படுகிறது சமீபத்திய ஆய்வுகளின்படி மரத்தின் பூக்கள் இலைகள் பட்டை மற்றும் இலைகள் நுண்ணுயிர்களால் குடல்புழு நீக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.