பிரச்சனைக்கான சொல்யூசன் அவ்வளவு சிரமமானது இல்லீங்க… ரொம்ப சிம்பிள்.. இத படிச்சு பாருங்க!!

பிரச்சனைக்கான சொல்யூசன் அவ்வளவு சிரமமானது இல்லீங்க… ரொம்ப சிம்பிள்.. இத படிச்சு பாருங்க!!

Update: 2020-01-02 03:44 GMT

கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளர் ஒருவர் உலகதரமிக்க
சிறப்பான ஒரு காரை வடிவமைத்தார். அந்த வடிவமைப்பிற்கு அங்கீகாரமாய் அவரின் திறனை
உழைப்பை புகழ்ந்து தள்ளியிருந்தார் அக்கார் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்.

சர்வ வசதியும் கொண்ட அந்த காரை தயாரிப்பு நிலப்பரப்பை விட்டு வெளியே எடுக்க
முயலும் போது தான் ஒன்றை கண்டறிந்தார்கள். அந்த கார், தயாரிப்பு
நிலப்பரப்பின் நுழைவு வாயிலை விட சில அங்குலங்கள் உயரமானதாக இருந்தது. இதை
நினைத்து பெரிதும் வருந்திய பொறியாளர் கவலையுற்றார்.

இப்போது காரை எப்படி வெளியே எடுப்பது என வியந்தும் அதிர்ந்தும் நின்றார்
கார் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். அங்கு பணிபுரிந்த பெயின்டர் சொன்னார்...
"சில அங்குல வித்தியாசம் தான் இல்லையா... நீங்கள் எந்த கவலையுமின்றி ஓட்டி
வாருங்கள் காரின் மேல் பாகத்தில் சில சிராய்ப்புகள் இருக்கும்.. அதை என் திறனால்
சரி செய்து விடுகிறேன்" என்று...

அதற்கு அக்காரை வடிவமைத்த பொறியாளர் கூறினார்... "தேவையில்லை... புதிய
காரை எதற்காக பாழக்க வேண்டும் நுழைவு வாயிலை லேசாக இடித்து விடலாம் பின்பு அதை
பூசிகொள்ளலாம்"

எந்த பதிலும் அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு நிறைவை தருவதாயில்லை.
நுழைவாயில் உடைவதும், கார் சிராய்வதும் அவருக்கு ஏதோவொரு வித உளைச்சலை
தருவதாக இருந்தது. அவேளையில் அங்கு வாயிற்காப்பாளராக பணிபுரியும் முதியவர் ஒருவர்
தான் நினைக்கும் தீர்வை சொல்லலாமா? என வினவினார்.

வழக்கமான ஏளனம், எள்ளல் அனைத்தையும் தாண்டி தன் கருத்தை சொன்னார்.
கார் சில அங்குலம் தான் நுழைவாயிலை விட உயர்வானதாக இருக்கிறது எனவே காரின்
சக்கரத்திலுள்ள காற்றை பிடுங்கிவிட்டால் அதன் உயரம் குறையும். எளிதாக வெளியே
எடுத்துவிடலாம் என்றார்.

பிரச்சனைகளுக்கான தீர்வை எப்போதும் நிபுணத்துவம் மிகுந்த பார்வையோடே அணுக
தேவையில்லை. சமயத்தில் நம் கைக்கு அருகிலேயே  இருப்பதை போல் மிக
எளிமையாக அவை வசப்படலாம்.


Similar News