ஒரு குடும்பத்துக்காக அநாவசியமாக ஆண்டுக்கு 332 கோடி ரூபாய் செலவு எதற்கு.? எஸ்.பி.ஜி விவகாரத்தில் பிரதமர் மோடி அரசு அதிரடி காட்டியதன் பின்னணி!

ஒரு குடும்பத்துக்காக அநாவசியமாக ஆண்டுக்கு 332 கோடி ரூபாய் செலவு எதற்கு.? எஸ்.பி.ஜி விவகாரத்தில் பிரதமர் மோடி அரசு அதிரடி காட்டியதன் பின்னணி!

Update: 2019-12-06 01:45 GMT

'


எஸ் பி ஜி சட்ட திருத்த மசோதா என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இந்த சட்டத்தின் அடிப்படையில் இனி பிரதமருக்கு மட்டுமே இந்த சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் இதற்க்கு முன் இந்த பாதுகாக்க வி வி ஐ பி களுக்கும் அளிக்கப்பட்டு வந்தது.


அரசு பதவியிலும் மிக முக்கியமானவர்களுக்கும் அளிக்கப்படும் பாதுகாப்பு முறை என்பது தகுதியின் அடிப்படையில் மாறுபடும். இந்த பாதுகாப்பு முறை அடிப்படியில் x, y z மற்றும் z பிளஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் இருக்கும் இதில் z பிளஸ் என்பது மிக உயரிய பாதுகாப்பு இதற்க்கு அடுத்ததாக இருப்பதே எஸ் பி ஜி என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு. இது நாட்டின் பிரதமருக்கு மட்டுமே இப்பொது அளிக்கப்படுகிறது. அடிப்படை பாதுகாப்பான x பிரிவு என்பது மூன்று பேர் கொண்ட குழுவாக இயங்கும், 2 பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தனிப்பட்டட் பாதுகாப்பு அதிகாரி. Y பிரிவில் 11 பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள் இதில் 2 தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருப்பார்கள். Z பிரிவில் 22 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், இதுபோக சில சி ர் பி ஏப் வீரர்களும் ஒரு பாதுகாப்பு வாகனமும் உடன் இருக்கும்


அதற்கடுத்ததாக இருக்கும் z பிளஸ் பிரிவு என்பது 36 பாதுகாவலர்களையும் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் வாகனங்களையும் உள்ளடக்கியது. இதில் 28 கமாண்டோக்கள் ஒரு விமானி, வாகன கான்வோய்கள் 12 ஹோம் கார்டுகள் இருப்பார்கள், இந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படும். தற்போதுள்ள எஸ் பி ஜி என்னும் பாதுகாப்பு படை 1988 இல் இந்திரா காந்தி யின் கொலைக்கு பிறகு உருவாக்கப்பட்டது. இது பிரதமருக்கும், முன்னாள் பிரதமர்க்களுக்கும் அவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 4000 பேர் இருக்கிறார்கள் இந்த படைக்கு ஆண்டு தோறும் 332 கோடி ருபாய் ஒதுக்கப்படுகிறது.



Similar News