பூங்கோதையை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய ஸ்டாலின் கோஷ்டி.!

பூங்கோதையை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய ஸ்டாலின் கோஷ்டி.!

Update: 2020-11-19 17:08 GMT

தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்கள் தற்பொழுது வெளிவர துவங்கியுள்ளன பெண்ணியம் பேசும் தி.மு.க'வில் ஒரு பெண் எம்.எல்.ஏ'வை சக உடன்பிறப்புக்கள் அவமானபடுத்தியதால் பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க'வின் முக்கிய பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 

Full View

தி.மு.க'வில் இவர் கனிமொழி அணி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாபன் ஸ்டாலின் அணி இப்படி இருவரும் இரு அணிகளாக பிரிந்தே இதுவரை அரசியல் செய்து வந்தனர். இன்று அந்த கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடித்து ஆலடி அருணா அதனால் உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு பெண் என்றும் பாராமல்  அசிங்கப்படுத்தப்பட்ட காரணத்தால் தற்பொழுது பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் சிவ.பத்மநாபன் அணியை சேர்ந்த சிவன் பாண்டியவன் என்பவர் வாய்க்கு வந்தபடி ஒரு பெண் என்றும் பாராமல் பூங்கோதை ஆலடி அருணா'வை கண்டபடி பேசியுள்ளார். இது மட்டுமின்றி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் எம்.எல்.ஏ என்றும் பாராமல் உட்கார நாற்காலி கூட தரப்படவில்லை என தெரிகிறது.

Full View

ஒரு கட்டத்தில் சிவ.பத்மநாபன் ஆட்கள் ஆலடி அருணாவை மிக கேவலமாக நடத்த அவமானம் தாங்காமல் அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இதனை சற்றும் மதிக்காத ஸ்டாலின் கோஷ்டியை சேர்ந்தவர்கள் தகாத வார்த்தைகளால் பூங்கோதை ஆலடி அருணாவை வெளியேறும்படி கேவலப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூங்கோதை ஆலடி அருணா அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு அவமானம் தாளாமல் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ஏதோ ஓர் மூலையில் ஒரு பெண்ணிற்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மெழுகுவர்த்தி ஏந்தி நியாயம் கேட்ட கனிமொழி தன் அண்ணன் ஸ்டாலின் கோஷ்டியினர் அவமானப்படுத்தியதால் ஒரு பெண் எம்.எல்.ஏ தற்கொலைக்கு முயன்றதை தட்டி கேட்பாரா? அல்லது அரசியலே பிழைப்பு என அமைதியாகிவிடுவாரா?

Similar News