பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசு மறுக்கிறது - அம்பலப்படுத்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எரிபொருள் மற்றும் மதுபானம் விற்பனையில் மாநில அரசுகள் அதிக வருவாயை ஈட்டி வருவதால் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை எதிர்ப்பதாக கூறினார்.
கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலை 43 சதவீதம் உயர்ந்த போதும் கலால் வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவில் இரண்டு சதவீதம் மட்டுமே விலை உயர்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். அண்டை நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்சினை இருந்தபோதும் இந்தியாவில் அந்த பிரச்சனை எழவில்லை எனவும் தெரிவித்தார்.